/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடி சான்று பெற ஆறு ஆண்டாக 'தவம்'; சிறப்பு முகாமில் இளைஞர் வேதனை
/
பழங்குடி சான்று பெற ஆறு ஆண்டாக 'தவம்'; சிறப்பு முகாமில் இளைஞர் வேதனை
பழங்குடி சான்று பெற ஆறு ஆண்டாக 'தவம்'; சிறப்பு முகாமில் இளைஞர் வேதனை
பழங்குடி சான்று பெற ஆறு ஆண்டாக 'தவம்'; சிறப்பு முகாமில் இளைஞர் வேதனை
ADDED : ஜூலை 01, 2025 10:34 PM

அன்னுார்; 'ஆங்கிலத்தில் சாதி சான்று பெறுவதற்கு, ஆறு ஆண்டுகளாக போராடி வருகிறேன்' என பழங்குடியின இளைஞர் வேதனையுடன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், மலைவாழ் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கரி, அலுவலக மேலாளர் கீதா லட்சுமி மனு பெற்றனர்.
இதில் பங்கேற்ற கெம்பநாயக்கன்பாளையம் ராஜேஷ், 38, என்பவர் தான் மலைவாழ் பழங்குடியைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்று ஆங்கிலத்தில் வழங்கக்கோரி ஆறு ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். அவரிடம் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் அளிக்க அதிகாரிகள் கூறினர்.
இளைஞர் ராஜேஷ், கர்நாடகாவில் கன்னட மொழியில் பெறப்பட்ட மலைவாழ் பழங்குடியினர் சான்று, தமிழகத்தில் பெற்ற வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து மனு தந்தார்.
ராஜேஷ் கூறுகையில், ''கர்நாடகாவில் கொள்ளேகால் மாவட்டத்தில் பந்தலி என்னும் கிராமத்தில் இருந்து, 13 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வேலை தேடி வந்தோம். இங்கு தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறேன். கர்நாடகாவில் பெற்ற கன்னட மொழி பழங்குடியின சாதிச் சான்றை ஆங்கிலத்தில் பெறுவதற்கு ஆறு ஆண்டுகளாக, அலைந்து வருகிறேன். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் ஜாதி சான்று வழங்க வேண்டும்,'' என்றார்.