/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டில் தகராறு; ஆறு வாலிபர்கள் கைது
/
விளையாட்டில் தகராறு; ஆறு வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 25, 2025 11:10 PM
கோவை; கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
மரக்கடையை சேர்ந்த ராகுல், 22 மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் தெற்கு உக்கடம், எஸ்.பி.என்., லே அவுட்டை சேர்ந்த விஜய், 21 மற்றும் அவரது நண்பர்கள் இடையே, கிரிக்கெட் விளையாடும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதனால் இவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.
கடந்த 22ம் தேதி இரவு, ராகுல் தனது நண்பர்களுடன், எஸ்.பி.என்., லே அவுட் பகுதியில் இருந்த போது விஜய் தரப்பினர் அங்கு வந்தனர். அப்போது இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இரு தரப்பினரும், மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.
தகவல் அறித்த ஆர்.எஸ்.புரம் போலீசார், பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, மரக்கடையை சேர்ந்த ராகுல், 22, நரசிம்மா வீதியை சேர்ந்த விக்னேஷ், 28, தெற்கு உக்கடத்தை சேர்ந்த உமர் பரூக், 22, விஜய், 21, முகமது செரீப், 20 மற்றும் மரக்கடையை சேர்ந்த ஆன்டனி ரொசாரியோ, 23 ஆகியோரை கைது செய்தனர்.