/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.ஜி., டெக்., அணி வெற்றி
/
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.ஜி., டெக்., அணி வெற்றி
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.ஜி., டெக்., அணி வெற்றி
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.ஜி., டெக்., அணி வெற்றி
ADDED : ஏப் 14, 2025 04:35 AM
கோவை : ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், பி.எஸ்.ஜி., டெக்., சி.சி., அணி வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆறாவது டிவிஷன் 'கே.வி.ராமச்சந்திரன் செட்டியார்' கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., மைதானத்தில் நடக்கிறது. பி.எஸ்.ஜி., டெக்., சி.சி., அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணியும் மோதின.
பேட்டிங் செய்த பி.எஸ்.ஜி., டெக்., சி.சி., அணி, 39 ஓவரில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 128 ரன்கள் எடுத்தது. அணி வீரர்களான பரணி, 53 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர், குமரேஷ் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய, ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணி, 33.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 76 ரன்கள் எடுத்தது. வீரர்கள் விமல்ராஜ், 37 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் பிரவீன்குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
கோவை புளூ நைட் அணியும், ஆரிஜின் ரீஜனல் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, கோவை புளூ நைட் அணி, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 223 ரன்கள் எடுத்தது. வீரர்கள் பூர்ணசந்திரன், 54 ரன்கள், சுஜய், 30 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் மோகன்ராஜ் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய, ஆரிஜின் ரீஜனல் கிரிக்கெட் கிளப் அணியினர், 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 218 ரன்கள் எடுத்தது.
அணி வீரர்கள் ஹரிஹரன், 72 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் சவுந்தரராஜன் நான்கு விக்கெட்களும், லோகேஷ்வரன் மூன்று விக்கெட்களும் வீழ்த்தி, வெற்றிக்கு வழிவகுத்தனர்.