/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வீஸ் ரோட்டில் சறுக்கல் பயணம்! தவிக்கும் வாகன ஓட்டுநர்கள்
/
சர்வீஸ் ரோட்டில் சறுக்கல் பயணம்! தவிக்கும் வாகன ஓட்டுநர்கள்
சர்வீஸ் ரோட்டில் சறுக்கல் பயணம்! தவிக்கும் வாகன ஓட்டுநர்கள்
சர்வீஸ் ரோட்டில் சறுக்கல் பயணம்! தவிக்கும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : ஜூலை 20, 2025 10:40 PM

கிணத்துக்கடவு; போக்குவரத்து மிகுந்த கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியை கடக்க திணறி வருகின்றனர்.
பொள்ளாச்சி-கோவை நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளதால், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்ல 'சர்வீஸ் ரோடு முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது. இந்த ரோடு பராமரிப்பில்லாமல் கட்டப்படும் அலட்சியத்தால் பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது.
தற்போது, டி.இ.எல்.சி., சர்ச் அருகே சர்வீஸ் ரோட்டில் கடந்த வாரம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வழிந்து ஓடியது. கசிவு சரிசெய்யப்பட்ட நிலையில், ரோட்டை முறையாக சீரமைப்பு செய்யவில்லை. குழி தோண்டிய மண்ணை அப்பகுதியில் குவித்து வைத்தனர்.
இதனால், குறுகலான இடத்தில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தடுமாறியபடி சென்றன. நேற்று அவ்வழியாக சென்று ஆட்டோ சேற்றில் சிக்கி, அப்பகுதியில் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சேறும், சகதியுமான பகுதியில், வாகனத்தை கன்ட்ரோல் செய்ய முடியாமல், ஸ்கேட்டிங் செல்வது போல தடுமாறுகின்றனர்.
மக்கள் கூறியதாவது: நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் குழாய் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன், செம்மண் கொண்டு தற்காலிகமாக குழி மூடப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். இங்கு மழை பெய்தால் மீண்டும் சேறும் சகதியுமாக மாறும். இதைத் தவிர்க்க கான்கிரீட் கலவையோ அல்லது தார் ஊற்றியோ ரோட்டை சரி செய்ய வேண்டும்.
தற்போது இந்த ரோட்டில் ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும், ரோடு குறுகலாகவும் உள்ளது. தற்போது புதிதாக மணலைக் கொட்டியுள்ளார்கள். இதை பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனித்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.