/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை கல்லுாரியில் திறன் வளர்ப்பு பயிற்சி
/
அரசு கலை கல்லுாரியில் திறன் வளர்ப்பு பயிற்சி
ADDED : டிச 13, 2025 06:34 AM
கோவை: கோவை அரசு கலை கல்லுாரியில், பொதுநிர்வாகத்துறை சார்பில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. முதல்வர் எழிலி நிகழ்வை துவக்கிவைத்தார்.
பெங்களூர் குவாண்டம் லேப் நிறுவன நிர்வாக இயக்குனர் யோகேஷ்குமார், தொழில்முனைனோர் திறன் மேம்பாட்டின் அவசியம், தொழில்முனைவோர் வாய்ப்புகள், வகைகள், தடைகள் குறித்து பயிற்சி அளித்தார். மாணவர்களுக்கான தொழில்முனைவோர் நிதியுதவி போட்டியும் நடத்தப்பட்டது.
இதில், 39 மாணவர்கள், 13 அணியாக பங்கேற்று தங்கள் தொழில் சார்ந்த யோசனைகளை விளக்கினர். சிறந்த மூன்று அணி தேர்வு செய்யப்பட்டது. பயிற்சி பட்டறையில், 155 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்வில், பொது நிர்வாகத்துறை தலைவர் எஸ்தர் புவனா, பேராசிரியர் மெர்சி, சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

