/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
பெண் போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 21, 2025 11:28 PM
கோவை; பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பெண் போலீசாருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், இரு கட்டங்களாக நடந்தன.
கோவை, திருப்பூரில் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் போலீசார் முதல் பெண் சிறப்பு எஸ்.ஐ. க்கள், நிலை வரையிலான, 1,946 பேர் பங்கேற்றனர்.
பெண்கள், குழந்தைகளுக்கான சட்டங்கள், அவர்களுக்கு எதிரான குற்றங்கள், அவர்களை கையாளும் முறைகள், புலனாய்வு நுட்பங்கள், ஆவணங்களை ஆவணப்படுத்துதல், போக்சோ, சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை, கூடாதவை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டன. யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.
பயிற்சி நிறைவு விழாவில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், பயிற்சி பெற்ற பெண் போலீசாருக்கு, சான்றிதழ்களை வழங்கினார்.