/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 28, 2025 09:07 PM

வால்பாறை; வால்பாறையில், பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான திறன் மேற்பாட்டு பயிற்சி, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பயிற்சியை வட்டார வள மைய திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் துவக்கி வைத்து பேசும் போது, ''ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்க வேண்டும்.
''எந்த பாடத்தில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர், குழப்பத்தில் உள்ளனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அதற்கு ஏற்ப அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பிற மாணவர்களை போல் சிறப்பாக கல்வி கற்கும் வகையில் தயார் படுத்த வேண்டும்,'' என்றார்.
பயிற்சியில், வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் 40 பேர் பங்கேற்றனர்.