sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மத்திய அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

/

மத்திய அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

மத்திய அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

மத்திய அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : அக் 30, 2025 11:26 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு (ஐ.எப்.ஜி.டி.பி.,) நிறுவனத்தில், பசுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில் இரு விதமான தொழில் முனைவு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தேங்காய் தொட்டி (கொட்டாங்கச்சி)யை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆகாயத்தாமரை மதிப்புக் கூட்டும் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் பங்கேற்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு. 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

பயிற்சி முற்றிலும் இலவசம். உணவு, தங்குமிடம், பயிற்சிக்கான பொருட்கள் ஆகியவையும் இலவசம். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு மத்திய அரசின் வனத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். ஒரு வி ண்ணப்பதாரர் ஒரு பயிற்சிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள், https://forms.gle/38BJJK228haYWuBf9 என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்கலாம். அல்லது https://tinyurl.com/2s45smha என்ற தளத்தில் இருந்து விண்ணப்பத்தை தரவிறக்கி, பூர்த்தி செய்து, இ.ஐ.ஏ.சி.பி., இந்திய வனமரபியல் மற்றும் வனப்பெருக்கு நிறுவனம், அஞ்சல் பெட்டி எண்: 1061 கவுலி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை---2 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் நவ. 30. வரும் டிச.,ல் பயிற்சி துவங்கும்.

மேலும் விவரங்களுக்கு 99526 45333, 99443 28696 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்






      Dinamalar
      Follow us