/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் திறன் இயக்கம் துவங்கியாச்சு! மாணவர் மேம்பாட்டிற்கு ஏற்பாடு
/
அரசு பள்ளிகளில் திறன் இயக்கம் துவங்கியாச்சு! மாணவர் மேம்பாட்டிற்கு ஏற்பாடு
அரசு பள்ளிகளில் திறன் இயக்கம் துவங்கியாச்சு! மாணவர் மேம்பாட்டிற்கு ஏற்பாடு
அரசு பள்ளிகளில் திறன் இயக்கம் துவங்கியாச்சு! மாணவர் மேம்பாட்டிற்கு ஏற்பாடு
ADDED : ஆக 10, 2025 09:35 PM
பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, 'திறன் இயக்கம்' துவக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 'ஆல்பாஸ்' நடைமுறையில் இருப்பதால், பலர், அடிப்படை கல்வி அறிவு கூட இல்லாமல் உள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்த 'திறன் இயக்கம்' துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டு, 'திறன் மாணவர்கள்' என்ற தலைப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும். அதன்படி, ஒவ்வொரு வகுப்பிலும் திறன் தேர்வு நடத்தப்படும்.
அதில், 80 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், திறன் மாணவர்கள் என வகைப்படுத்தப்படுவர். இவர்களுக்கு தனியாக ஒரு வகுப்பறை ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களிலும் அடிப்படை அறிவு பெறும் வகையில் பயிற்சி கட்டகப் புத்தகம் தனித்தனியாக வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பயிற்சி நான்கு வாரங்கள் தொடர்ந்து நடைபெறும்.
தினமும், அன்றைய பாடப்பகுதியில் இருந்து சிறு தேர்வும், வாராந்திர தேர்வும் நடத்தப்படும். தொடர்ந்து, இணையதளத்தில் வெளியிடப்படும் வினாத்தாள்களுக்கு ஏற்ப தேர்வும் நடத்தப்படும்.
நான்கு வாரங்களுக்கு பின் கற்றலில் அடிப்படைத் திறன் பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு உரிய வகுப்பிற்கு அனுப்பப்பட்டு, தொடர்ச்சியான வகுப்பறை கற்றலுக்கு அனுமதிக்கப்படுவர்.
குறிப்பிட்ட இலக்கை அடையாத மாணவர்களுக்கு, முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டு, திறன் பெற்றவுடன் வகுப்பறைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

