/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவு சார் மையத்தில் திறனறிவு பயிற்சி
/
அறிவு சார் மையத்தில் திறனறிவு பயிற்சி
ADDED : செப் 07, 2025 09:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அறிவுசார் மையத்தில், தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கின.
மேட்டுப்பாளையம் மணி நகரில் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் உள்ளது. இங்கு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வை, தமிழக அரசு நடத்த உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் அறிவு சார் மையத்தில் துவங்கி உள்ளன.
நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார். நகராட்சித் தலைவர் மெகரிபா பர்வின் பயிற்சி வகுப்பு வகுப்பை துவக்கி வைத்தார். 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.