/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை ரயில்வே கேட்டில் 'ஸ்லைடிங் பூம்ஸ்' அமைப்பு
/
காரமடை ரயில்வே கேட்டில் 'ஸ்லைடிங் பூம்ஸ்' அமைப்பு
ADDED : ஜன 01, 2025 06:24 AM

மேட்டுப்பாளையம் : காரமடை - தோலம்பாளையம் சாலையில் உள்ள, ரயில்வே கேட்டில் ஆக்சிலரி ஸ்லைடிங் பூம்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதை ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தொழில்நுட்ப கோளாறுகளின் போது அல்லது கேட் துாக்கும் போது வாகனங்கள் கேட்டின் மீது மோதினால் தடைகள் ஏற்பட்டு, ரயில்வே கேட் பலவீனம் அடைகின்றன.
இதனால் மீண்டும் கேட்டை திறக்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தடுக்க லெவல் கிராசிங் கேட்டில் ஸ்லைடிங் பூம்கள் தற்போது இந்திய ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காரமடையில் இருந்து தோலம்பாளையம் செல்லும் சாலையில், தெப்பக்குளம் அருகே உள்ள ரயில்வே கேட்டில் நேற்று ஸ்லைடிங் பூம்ஸ் அமைக்கப்பட்டது.
கோவை சிக்னல் பிரிவு சீனியர் செக்சன் இன்ஜினியர் சரவணன் மற்றும் ரயில்வே ஊழியர்கள் நேற்று இதை ஆய்வு செய்து, பல முறை ஸ்லைடிங் பூம்ஸ் கேட்டினை திறந்து மூடி சோதனை செய்தனர். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''ரயில்வே லெவல் கிராசிங் கேட்டிற்கு அருகிலேயே இந்த ஸ்லைடிங் பூம்ஸ் எனப்படும் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட்டில் பிரச்னைகள் ஏற்படும் போது, ரயில் சிக்னல்கள், போக்குவரத்து தடைபடாமல் இருக்க, இந்த ஸ்லைடிங் பூம்ஸ் பயன்படுத்தப்படும்,'' என்றார்.

