தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!

படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!

படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!


ADDED : ஜூன் 19, 2025 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 07:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை : குடியிருப்பு பகுதியில் உள்ள வழுக்கல் நிறைந்த படிக்கட்டுகளில் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, தென்மேற்குப் பருவமழை பெய்கிறது. வால்பாறை நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நடைபாதையில் நடந்து செல்லும் போது, கிழே விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் பருவமழை பெய்யும் நிலையில், பல்வேறு இடங்களில் கால்வாய் கூட இல்லாததால், மழை நீர் நடைபாதை வழியாக செல்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது. நகராட்சி சார்பில் வழுக்கல் நிறைந்த அனைத்துப்பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us