/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்லோகன் போட்டி; ரூ.20 லட்சம் பரிசுகள்
/
ஸ்லோகன் போட்டி; ரூ.20 லட்சம் பரிசுகள்
ADDED : நவ 14, 2024 11:16 PM

கோவை, ; கோவை சரவணம்பட்டி புரோசோன் மாலில் தீபாவளியை முன்னிட்டு, 'புரோசோன் பேமிலி பார்சுன்' அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், 9,999 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்தவர்கள் ஸ்லோகன் எழுதும் போட்டியில் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக லக்சிதா என்ற வாடிக்கையாளருக்கு கார், பிரசன்ன கியா நிறுவன முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் துரைசாமி வழங்கினார்.
மேலும், இரண்டாவது பரிசாக ஷியாமலா என்ற வாடிக்கையாளருக்கு 2.50 லட்சம் மதிப்புள்ள சர்வதேச சுற்றுலாவும், மூன்றாவது பரிசாக மாரியப்பன் என்ற வாடிக்கையாளருக்கு 1.15 லட்சம் மதிப்புள்ள தங்கம், நான்காவது பரிசாக ஒரு லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர் வாடிக்கையாளர் இளஞ்செழியனுக்கும் வழங்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா நிகழ்வில், டி.என்.இ.டி., அதிகாரி சந்திரா, புரோசோன் மால் மைய இயக்குனர் அம்ரிக் பனேசர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.