/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமண பதிவின்போது பெற்றோர் கையொப்பம் கட்டாயமாக்க கோரிக்கை முழக்கம்

ADDED : பிப் 17, 2025 11:13 PM

கோவை; திருமண பதிவின்போது பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் எழுச்சி பேரவை சார்பில், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பேரவையின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் கருணாநிதி தலைமை வகித்தார்.
சக்திசேனா இந்து மக்கள் இயக்க நிறுவன தலைவர் அன்புமாரி, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாபு உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.
அவர்கள் பேசுகையில், 'பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் பதிவு திருமணம் செய்யும் பெண்களில் பலர்,விவாகரத்துக்காக நீதிமன்றங்களில் காத்திருக்கின்றனர்.
இதை தடுக்க, திருமண பதிவின்போது பெற்றோர் கையொப்பம் கட்டாயமக்கப்பட வேண்டும்.
பெற்றோர் கையொப்பம் குறித்த அரசாணையை அரசு வெளியிடவில்லையேல், தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு' எனக்கூறிக்கொண்டு,மது விற்கின்றனர். மது விலக்கு கொண்டுவர இந்த அரசு தயங்குகிறது' என்றனர்.