/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் நிலைய வளாகத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு
/
தபால் நிலைய வளாகத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு
ADDED : பிப் 03, 2024 12:55 AM

கோவை;ராம்நகர் துணை தபால் நிலையத்தில், முறையான அரசு அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காந்திபுரம் அருகே ராம்நகர் துணை தபால் நிலையம் உள்ளது. இந்நிலைய வளாகத்தில் அசோக மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் காணப்படுகின்றன.
நேற்று காலை அங்கிருந்த இரண்டு மரங்கள், வருவாய் துறையின் முறையான அனுமதியின்றிவெட்டப்பட்டதாக, சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கோவை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கோபாலன் கூறுகையில், ''கட்டடத்தை ஒட்டி வளர்ந்திருக்கும்மரங்களின்வேர்கள், கட்டடத்தை பாதித்து வருகிறது. மேற்கூரையிலும் 'கான்கிரீட்' கட்டமைப்பில், விரிசல் போன்ற சேதங்கள் ஏற்பட்டு, கவுன்டர்களையே இடமாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களது 'சிவில்' துறையினரும் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தினர். எனவே, மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளோம். மரத்தை வெட்ட, வருவாய் துறையிடம் அனுமதி பெறப்படும்,'' என்றார்.

