/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடை அருகே வேகத்தை குறைக்கணும்! அறிவிப்பு பலகை அவசியம்
/
வேகத்தடை அருகே வேகத்தை குறைக்கணும்! அறிவிப்பு பலகை அவசியம்
வேகத்தடை அருகே வேகத்தை குறைக்கணும்! அறிவிப்பு பலகை அவசியம்
வேகத்தடை அருகே வேகத்தை குறைக்கணும்! அறிவிப்பு பலகை அவசியம்
ADDED : ஜூலை 04, 2025 10:13 PM
பொள்ளாச்சி; சிறிய அளவிலான வேகத்தடையை கடக்கும் வாகனங்கள், வேகத்தை குறைக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி நகரில் இருந்து, கோவை, உடுமலை, பல்லடம், தாராபுரம், கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட ஊர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில், வாகனங்களின் இயக்கம் அதிகரித்து வரும் நிலையில், விபத்து நிகழும் பகுதிகள் கண்டறியப்பட்டு, சிறிய அளவிலான வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்), ஒளி பிரதிபலிக்கும் 'ஸ்டட்' (கேட் ஐ) அமைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில், 'மெதுவாக செல்லவும்' என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வழித்தடத்திலும், வழக்கமாக செல்லும் சில ஓட்டுநர்கள் மட்டுமே, விதிகளைப் பின்பற்றி, வாகனத்தின் வேகத்தை குறைந்து, வேகத்தடையை மெதுவாக கடக்கின்றனர்.
பெரும்பாலான ஓட்டுநர்கள், வேகத்தை சிறிதும் குறைக்காமல் வேகத்தடையை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில், வேகத்தை குறைத்து, வேகத்தடையை கடக்க முற்படும் வாகனங்கள் மீது, பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் இடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சாலையோரத்தில், மருத்துவமனை, பள்ளி, சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களை கடக்கும் பகுதிகளில் மட்டுமே, சிறிய அளவிலான வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறிய அளவிலான வேகத்தடையை கடக்கும் போது, வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், ஆங்காங்கே விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,' என்றனர்.