/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுகுடல் அறுவை சிகிச்சை: உயிர் காத்த அரசு மருத்துவமனை டாக்டர்கள்
/
சிறுகுடல் அறுவை சிகிச்சை: உயிர் காத்த அரசு மருத்துவமனை டாக்டர்கள்
சிறுகுடல் அறுவை சிகிச்சை: உயிர் காத்த அரசு மருத்துவமனை டாக்டர்கள்
சிறுகுடல் அறுவை சிகிச்சை: உயிர் காத்த அரசு மருத்துவமனை டாக்டர்கள்
ADDED : நவ 04, 2024 08:55 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி குமரன் நகர் வள்ளியம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் நடராஜ்,70; மசால் பொரி வியாபாரி. வயிற்று வலி பாதிப்பால் அவதிப்பட்ட இவரை, இரண்டு நாட்களுக்கு முன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.
பரிசோதனை செய்த அறுவை சிகிச்சை டாக்டர் முருகேசன், மயக்கவியல் டாக்டர் நவாஸ், அறுவை சிகிச்சை முதுநிலை மாணவர்கள் வெங்கடேஷ், மணிமேகலை ஆகியோர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, அவருக்கு மருத்துவ குழுவினர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து, சிறுகுடலில் ஓட்டை ஏற்பட்டு, குடலில் இருந்த அடைப்பு கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சை குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, அறுவை சிகிச்சை பிரிவு சீனியர் டாக்டர் கார்த்திக்கேயன் ஆகியோர், முதியவரின் குடும்பத்தினரிடம் விளக்கினர்.
அறுவை சிகிச்சை டாக்டர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சியை சேர்ந்த நடராஜ், வயிற்று வலி பாதிப்பு காரணமாக கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுகுடலில் ஓட்டை ஏற்பட்டு குடலில் அடைப்பு இருப்பதாகவும், இருதய துடிப்பு மாற்றம் உள்ளதால், மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, 45 செ.மீ., சிறுகுடல் நீக்கப்பட்டு, குடல் இணைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்த சிறுகுடல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு, காசநோய், புற்றுநோய் வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா என, பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும்.
இவ்வாறு, கூறினர்.