/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய அளவிலான விளையாட்டு துவக்கம்
/
குறுமைய அளவிலான விளையாட்டு துவக்கம்
ADDED : ஜூலை 25, 2025 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே, சுந்தரகவுண்டனுார் சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி துவக்க விழா நடந்தது. கிழக்கு குறுமைய செயலாளர் கோபால்சாமி தலைமை வகித்தார்.
டாக்டர் சங்கவி, பொள்ளாச்சி தபால் அலுவலக அலுவலர் அபிஆதித்யன், போட்டிகளை துவக்கி வைத்தனர். பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு, பள்ளி முதல்வர் ரமாதேவி பேசினர்.
இதில், கிழக்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், சதுரங்க போட்டியில் ஆர்வமாக பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.