/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் லுக்கை மாற்றும் 'சின்ன சின்ன' விஷயங்கள்
/
உங்கள் லுக்கை மாற்றும் 'சின்ன சின்ன' விஷயங்கள்
ADDED : நவ 23, 2025 06:31 AM

உ ங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தையும் தூக்கி நிறுத்துவது, நீங்கள் அணியும் சின்ன சின்ன ஆக்சஸரீஸ் தான். சிம்பிளாக உடை அணிந்தாலும், அதை நேர்த்தியாகக் காட்டுவது, நாம் தேர்வு செய்யும் அணிகலன்கள்.
இதை பேஷன் உலகில், 'ஸ்டேட்மென்ட் ரூல்' என்கிறார்கள். ஆண்கள் தங்கள் தோற்றத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துக்காட்ட, சின்ன மாற்றங்கள் செய்தால் போதும் என்கின்றனர், ஆடை வடிவமைப்பாளர்கள்.
கருப்பு உடையும் சில்வர் செயினும் * கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்கள், 'மோனோ குரோமேட்டிக்' எனப்படும் ஒரே நிற ஆடைகளை முயற்சி செய்யலாம். குறிப்பாக, கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேன்ட்ஸ் அணிந்து, அதனுடன் ஸ்லீக் - ஆன சில்வர் செயின் மற்றும் பிரேஸ்லெட் அணிந்து பாருங்கள்.
கருப்பு நிறத்துடன் சில்வர் சேரும்போது, நீங்களும் சரி, அந்த சில்வர் அணிகலனும் சரி... பார்ப்பதற்கு செம 'ஹைலைட்டாக'வும், 'மாஸ்' ஆகவும் தெரிவீர்கள்.
'கிளாஸி' லுக் * தினமும் ஆபீசுக்கு பார்மல் ஷர்ட் மற்றும் பேன்ட்ஸ் போட்டுச் செல்வது போரிங் ஆக இருக்கிறதா? கவலையை விடுங்கள். உங்கள் கையில் கட்டும் வாட்ச் மூலம், அந்த லுக்கை மாற்றலாம். ஒரு நல்ல பிரவுன் லெதர் ஸ்ட்ராப் வாட்ச் அணிந்து பாருங்கள்.
ஏன் பிரவுன்? பிரவுன் நிறம் என்றால், அது எல்லா நிற உடைகளுக்கும் கச்சிதமாக பொருந்தும். அதுமட்டுமின்றி, இது உங்களை மிகவும் 'ஏஸ்தடிக் ஆகவும், கிளாஸியாகவும் காட்டும்.
* சாதாரணமாக, ஒரு கேஷுவல் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து வெளியே செல்கிறீர்களா? உங்கள் ஸ்டைலை உடனடியாக 'லெவல்-அப்' செய்ய, காலணிகளில் கவனம் செலுத்துங்கள்.
சாதாரண செருப்புகளுக்கு பதிலாக, எம்பிராய்டரி செய்யப்பட்ட லோபர்ஸ் (Embroidered Loafers) அணிந்து பாருங்கள்.
இது உங்களை மொத்தமாக அழகாகவும், ஸ்டைலிஷ் ஆகவும் மாற்றிக்காட்டும். ஆடைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அதற்கேற்ற ஆக்சஸரீஸ்.
சரியான தேர்வே, உங்களை கூட்டத்தில் தனித்துக்காட்டும்!

