/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு
/
அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு
ADDED : மார் 26, 2025 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:
அரசூர் துவக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை துவக்க விழா நடந்தது.
அரசூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், புளோ லிங்க் சிஸ்டம் நிறுவனத்தின் சமுதாய பங்களிப்பு நிதியில் இருந்து, 900 சதுர அடியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டப்பட்டது. நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி நித்தியானந்தன் வகுப்பறையை திறந்து வைத்தார். 65 அங்குல தொடுதிரையுடன் கூடிய வகுப்பறை மாணவ, மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என, ஆசிரியர்கள் கூறினர்.
வட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வி, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.