/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எம்.எஸ்., கல்லுாரி விளையாட்டு தின விழா
/
எஸ்.எம்.எஸ்., கல்லுாரி விளையாட்டு தின விழா
ADDED : மார் 20, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;எஸ்.எம்.எஸ்., கல்லுாரியின் ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கு, வேதாத்திரி பேச்சு அறிவாற்றல் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் நாகநந்தினி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
விழாவில், எஸ்.எம்.எஸ்., கல்லுாரி முதல்வர் (பொ) பாக்யலட்சுமி, துணை முதல்வர் ஜாய் சுகன்யா, உடற்கல்வி இயக்குனர் பாலசுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

