/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 3,662 மாணவர்களுக்கு சிற்றுண்டி
/
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 3,662 மாணவர்களுக்கு சிற்றுண்டி
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 3,662 மாணவர்களுக்கு சிற்றுண்டி
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 3,662 மாணவர்களுக்கு சிற்றுண்டி
ADDED : டிச 26, 2025 05:13 AM
கோவை: மாநகராட்சி பள்ளிகளில், 1,767 பிளஸ் 2 மாணவர்கள், 1,895 பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர். அடுத்தாண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மாலைநேர சிறப்பு வகுப்பு நடத்துவது வழக்கம். இவ்வகுப்பு ஜன. முதல் நடைபெற இருக்கிறது. இவர்களுக்கு மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து மாலைநேர சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் வீதம் தோராயமாக 2025-26 கல்வியாண்டில் 50 நாட்களுக்கு வழங்க, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு விதமான மெனு தயாரிக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது.
ஒரு மாணவனுக்கு வழங்கும் சிற்றுண்டி செலவு ரூ.30, ரூ.29.50, ரூ.28 என மூன்று விலைப்புள்ளிகளில் மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரின.
இதில், ரூ.28க்கு சிற்றுண்டி வழங்க உறுதியளித்த நிறுவனத்தை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்தது. 30ம் தேதி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்ததும் 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்படும்,என அதிகாரிகள் தெரிவித்தனர்.

