/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருசக்கர வாகனத்தில் பதுங்கிய சாரைப்பாம்பு
/
இருசக்கர வாகனத்தில் பதுங்கிய சாரைப்பாம்பு
ADDED : ஜன 24, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
சிறிது நேரம் கழித்து வாகனத்தை எடுக்க வரும்போது வாகனத்துக்குள் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு வீரர்கள், வாகனத்தின் பாகங்களை பிரித்து உள்ளே பதுங்கி இருந்த, 3 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு, பாலமலை வனப்பகுதியில் விடுவித்தனர்.

