/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் வளாகத்திற்குள் பிடிபட்ட பாம்புகள்
/
கோவில் வளாகத்திற்குள் பிடிபட்ட பாம்புகள்
ADDED : ஆக 31, 2025 11:18 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், திறந்தவெளி புற்றுக்கள், மறைவிடங்களில் அதிகப்படியான பாம்புகள் தென்படுகின்றன.
வெப்பம் தாங்காமல் இடம்பெயரும் பாம்புகள், வீடுகளில் குளிர்ச்சியான இடங்களை தேடிச் சென்று, பதுங்கி விடுகிறது.
இந்நிலையில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததை பார்த்த ஊழியர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், 'பைத்தான் மாலரஸ்' என்று அழைக்கப்படும் 11 அடி நீள மலைப்பாம்பு மற்றும் 9 அடி நீள சாரைப் பாம்பை பிடித்தனர்.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடப்பட்டது.