/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடமாநிலங்களில் பனிப்பொழிவு எதிரொலி: கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை சரிவு
/
வடமாநிலங்களில் பனிப்பொழிவு எதிரொலி: கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை சரிவு
வடமாநிலங்களில் பனிப்பொழிவு எதிரொலி: கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை சரிவு
வடமாநிலங்களில் பனிப்பொழிவு எதிரொலி: கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை சரிவு
ADDED : நவ 16, 2025 01:09 AM

பொள்ளாச்சி: வட மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், தேங்காய் கொப்பரை, எண்ணெய் விலை சரிந்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தென்னை சாகுபடி அதிகமுள்ளது. இங்கிருந்து, தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு மாவட்டங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, கேரளா வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதலால், தேங்காய் விளைச்சல் பாதித்து, வரத்து குறைந்தது. இதனால், தேங்காய், கொப்பரை, எண்ணெய் விலை எதிர்பார்ப்பை விட உயர்ந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், வடமாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்து உள்ளதால், தேங்காய் எண்ணெய் தேவை சரிந்து, தேங்காய் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
தேங்காய் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது. கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்தது. இந்நிலையில், வடமாநிலங்களில் பனிப்பொழிவு துவங்கியுள்ளதால், தேங்காய் எண்ணெய் தேவை குறைந்துள்ளது.
அங்கு தற்போது, கடுகு எண்ணெய் அதிகளவு பயன்படுத்துவதால், தேங்காய் எண்ணெய் தேவை குறைந்துள்ளது. ஜன. மாதம் வரை பனிக்காலம் என்பதால் எண்ணெய் தேவை குறைந்து, விலையும் சற்று குறைந்துள்ளது.
கடந்த வாரம், கொப்பரை கிலோ 230 ரூபாய் வரை இருந்தது. தற்போது, 20 ரூபாய் குறைந்து, 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 15 கிலோ டின் தேங்காய் எண்ணெய், 5,800 ரூபாயில் இருந்து, 4,670 ரூபாயாக குறைந்துள்ளது. பச்சை தேங்காய், 69,000 ரூபாயில் இருந்து, 65,000 ரூபாயாகவும்; கருப்பு தேங்காய், 72,000 ரூபாயில் இருந்து, 68 ஆயிரம் ரூபாயாகவும் குறைந்துள்ளது.
கேரளாவில் ஜன. மாதம் சீசன் துவங்க உள்ளது. இச்சூழலில், மேலும் விலை குறையக்கூடாது. தற்போதுள்ள விலை நீடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

