/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
எஸ்டேட்டில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் குதுாகலம்
எஸ்டேட்டில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் குதுாகலம்
எஸ்டேட்டில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : ஜூன் 25, 2025 09:36 PM

வால்பாறை; வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் படர்ந்த பனி மூட்டத்தை, சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பெய்யும் நிலையில், எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதே போல் கவர்க்கல், வாட்டர்பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான நேரத்தில் நிலவும் பனிமூட்டத்தால் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கு ஒளிர விட்டு செல்கின்றனர்.
பனி படர்ந்த மலைப்பாதையில் சுற்றுலா பயணியர் பனிமூட்டத்தை கண்டு ரசித்தபடி பயணம் செய்கின்றனர்.
இதனிடையே, எஸ்டேட் பகுதியில் காலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பனி மூட்டத்தால், எதிரே வனவிலங்குகள் வருவதை கூட அறிய முடியாத நிலையில் தவிக்கின்றனர்.