/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.என்.எஸ்., குழும பட்டமளிப்பு விழா
/
எஸ்.என்.எஸ்., குழும பட்டமளிப்பு விழா
ADDED : நவ 11, 2024 04:24 AM

கோவை: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியின், 18வது பட்டமளிப்பு விழா மற்றும் எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரியின், 14வது பட்டமளிப்பு கோவை எஸ்.என்.எஸ்., அகாடமி வளாகத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு மைக்ரோசாப்ட் திட்ட தலைவர் ராகுல் டே மற்றும் கோவை இ.ஏ.டி., இன்ஜினியரிங் தொழில்நுட்பத் துறை இயக்குனர் வித்யா ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களிடையே உரையாற்றினர்.
இந்த விழாவில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியை சேர்ந்த, 1065 பேருக்கும், எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரியை சேர்ந்த, 275 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களின் சாதனைகள் பற்றி தெரிவித்தனர்.