/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த ஆசிரியர்களுக்கு எஸ்.என்.எஸ்.,கவுரவம்
/
சிறந்த ஆசிரியர்களுக்கு எஸ்.என்.எஸ்.,கவுரவம்
ADDED : மார் 29, 2025 05:47 AM

கோவை : சரவணம்பட்டி, டாக்டர் எஸ்.என்.எஸ்.,ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. தமிழக அரசின் முன்னாள் டி.ஜி.பி., ஆஷிஷ் பெங்கரா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, தமிழக அரசின் முன்னாள் துணை தலைமைச் செயலர் சபிதா கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''சிறந்த குடிமகன்களை உருவாக்குவது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது,'' என்றார்.
தமிழகளவில், 101 பேராசிரியர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின், என்.ஐ.பி. எம். எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி உறுப்பினர் மனோகரன், முதன்மை அதிகாரி டேனியல், முதல்வர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.