/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்கோபஸ்' விருதை வென்ற எஸ்.என்.எஸ்., பேராசிரியர்
/
'ஸ்கோபஸ்' விருதை வென்ற எஸ்.என்.எஸ்., பேராசிரியர்
'ஸ்கோபஸ்' விருதை வென்ற எஸ்.என்.எஸ்., பேராசிரியர்
'ஸ்கோபஸ்' விருதை வென்ற எஸ்.என்.எஸ்., பேராசிரியர்
ADDED : நவ 20, 2025 02:32 AM
கோவை: சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியில், மின்தொழில்நுட்ப துறையில் இணைப் பேராசிரியர் மற்றும் இன்னோவேட்டராக பணியாற்றும் சிவக்குமார், மின்சார வாகன ஆராய்ச்சி துறையில் தேசிய அளவில் உயரிய, ஸ்கோபஸ் தரவரிசையைப் பெற்றுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர் வெளியிட்ட மொத்த உயர்தர இ.வி.,ஆராய்ச்சி கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்திய அளவில் ஒன்பதாவது இடம், தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடம் என முக்கியமான தரவரிசைகளைப் பெற்றுள்ளார். 2025ம் ஆண்டுக்கான ஸ்கோபஸ் -இன்டெக்ஸ்டு இ.வி., ஆராய்ச்சி கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் மூன்றாவது இடம், தமிழ்நாட்டில் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.
பேராசிரியர் சிவக்குமாரின் ஆராய்ச்சி முயற்சிகள், இந்தியாவில் நிலைத்தன்மை வாய்ந்த போக்குவரத்து தீர்வுகள், மின்சார வாகன மேம்பாடு மற்றும் எதிர்கால இயக்கத்துறையின் முன்னேற்றத்துக்கு, முக்கிய ஆதரவாக விளங்கி வருவதாக, கல்லுாரி நிர்வாகிகள் பாராட்டினர்.

