/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விரைவில் வாக்காளர் உதவி மையங்கள்'
/
'விரைவில் வாக்காளர் உதவி மையங்கள்'
ADDED : நவ 20, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில், வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
கோவை கலெக்டர் பவன்குமார் கூறுகையில், ''விரைவில் கோவையிலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்படும். அவை இடைவெளி ஏதும் விடப்படாமல் தொடர்ந்து இயங்கும் வகையில் இருக்கும். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.

