ADDED : ஏப் 29, 2025 11:48 PM

பெ.நா.பாளையம்,; பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் உள்ள ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, 'ஆத்ம விழிகள்' என்ற சமூக சேவை அமைப்பை துவக்கி உள்ளனர்.
இந்த அமைப்பின் வாயிலாக, அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது, இலவச அமரர் ஊர்தி, துக்கம் நடந்த வீடுகளுக்கு உடனடி உதவியாக சாமியானா, டேபிள், சேர், தேநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏழை, எளியோர் வீடுகளில் இறப்பு ஏற்படும்போது என்ன செய்வது என்ற நிலையில் இருக்கும்போது, அதோடு ஆதரவற்றவர்களின் உடல்களை அரசுத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுடன் முறையாக சடங்குகளை செய்து, இதுவரை, 20க்கும் மேற்பட்ட உடல்களை இந்த அமைப்பினர் நல்லடக்கம் செய்துள்ளனர். இலவச சேவை தேவைப்படுவோர் முருகன், 70926 28231, விஷ்ணு, 95003 04319 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

