/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொடல்டெக் நிறுவனத்தின் உலகப் புகழ் பெற்ற பேப்பர் கன்வெர்ஷன் இயந்திரங்கள்
/
சொடல்டெக் நிறுவனத்தின் உலகப் புகழ் பெற்ற பேப்பர் கன்வெர்ஷன் இயந்திரங்கள்
சொடல்டெக் நிறுவனத்தின் உலகப் புகழ் பெற்ற பேப்பர் கன்வெர்ஷன் இயந்திரங்கள்
சொடல்டெக் நிறுவனத்தின் உலகப் புகழ் பெற்ற பேப்பர் கன்வெர்ஷன் இயந்திரங்கள்
ADDED : செப் 30, 2025 10:33 PM
கோ வையில், கடந்த 1970-ஆம் ஆண்டு 'சொடல்டெக் நிறுவனம் எனப்படும், கே.யூ., சுடலைமுத்து அண்டு கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் துவங்கப்பட்டது.இது, நவீன பேப்பர் கன்வெர்ஷன் இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்வதில், ஆசியாவிலேயே முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது.
நிறுவனர், சுடலைமுத்துவால், 55 ஆண்டுகளுக்கு முன்பு, சிறு தொழில் நிறுவனமாக துவங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக, காகித கோன் தயாரிக்கும் தானியங்கி இயந்திரங்களை தயாரித்தது.தரம், வாடிக்கையாளர் சேவை, வணிகத்தில் நாணயம் முதலியவற்றை கடைபிடித்த நிறுவனம், இன்று மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்நிறுவனத்தில், காகித கோன், காகித உருளைகள், காகித டப்பாக்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் நவீன இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. கழிவு காகிதங்களை மறு சுழற்சி செய்து முட்டை ட்ரே, ஆப்பிள் ட்ரே முதலியவற்றை தயாரிக்கும் நவீன இயந்திரங்களும் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில், 900க்கும் மேற்பட்ட இயந்திரங்களை விற்பனை செய்துள்ள இந்நிறுவனம், 70 நாடுகளுக்கும் மேல் இயந்திரங்களை ஏற்றுமதியும் செய்கின்றது. அதிக அளவில் ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம், என்ஜினியரிங் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்றுமதி விருதினை, தொடர்ந்து 24 ஆண்டுகளாக பெற்று சாதனை படைத்துள்ளது.
சிறந்த இயந்திர வடிவமைப்பிற்கான இந்திய அரசின், 'பேக்மெஷின்' விருதினையும் பெற்றுள்ளது. நேர்மையான வணிக நெறிகளைக் கடைப்பிடித்தமைக்காக புகழ்பெற்ற 'ஜம்னாலால் பஜாஜ்' விருதினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் தொழிற்கண்காட்சிகளில், தனது அரங்குகளை தொடர்ந்து நிறுவி வருகிறது. இயந்திரங்களை விற்பனை செய்வது மட்டுமின்றி, இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்திய தொழிற்கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில், தென்மண்டல கவுன்சில் மற்றும் தேசிய கவுன்சில் நிர்வாகிகள் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தொழிற்கூட்டமைப்பின் கவுன்சில் செயல்பாடுகளில், இந்நிறுவனத்தின் இயக்குனர் பாலமுருகன், முனைப்பான ஈடுபாடு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும், நவீன மாடல்களில் பேப்பர் கன்வெர்ஷன் இயந்திரங்களை அறிமுகப்படுத்தி, கடந்த 55 ஆண்டுகளாக, இத்துறையில் முன்னிலையில் சொடல்டெக் நிறுவனம் உள்ளது.