/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மென்பொருள் சிக்கல் தீர்கிறது; மீண்டு வருகிறது தபால்துறை
/
மென்பொருள் சிக்கல் தீர்கிறது; மீண்டு வருகிறது தபால்துறை
மென்பொருள் சிக்கல் தீர்கிறது; மீண்டு வருகிறது தபால்துறை
மென்பொருள் சிக்கல் தீர்கிறது; மீண்டு வருகிறது தபால்துறை
ADDED : ஆக 16, 2025 09:22 PM
கோவை; தமிழக தபால் துறையில், முதற்கட்டமாக, திருச்சி மண்டலத்தில் கரூர் கோட்டம் குளித்தலை, மேற்கு மண்டலத்தில் கோவை கோட்டம் கோவை, சென்னை மண்டலத்தில் வேலுார் கோட்டம் வேலுார், மதுரை மண்டலத்தில் கன்னியாகுமரி கோட்டம் தக்கலை ஆகிய தலைமை அஞ்சலகங்கள் மற்றும் இதன் கீழ் உள்ள துணை, கிளை அஞ்சலகங்களில் அட்வான்ஸ்டு போஸ்டல் டெக்னாலஜி' எனப்படும், 'ஏ.பி.டி., 2.0' மென்பொருள் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.
இரண்டாவது கட்டமாக, கடந்த 4ம் தேதி, தமிழகத்தின் பல இடங்களில் உள்ள கோட்டங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்கள், அதன் கீழ் உள்ள துணை, கிளை அஞ்சலகங்களில், மென்பொருள் சேவை பயன்பாட்டுக்கு வந்தது.
தபால் துறையின் தொழில்நுட்ப ஊழியர்களால், தரம் உயர்த்தப்பட்ட மென்பொருள் பயன்பாட்டில், 'க்யூஆர்' வாயிலாக பணம் செலுத்தும் வசதி உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இது, தபால் துறையில் சேவைக்கு வரும் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் நேரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மென்பொருள் சேவை பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இருந்து, சர்வர் பாதிப்பால், தமிழகம் முழுவதும், வாடிக்கையாளர்கள் சேவையில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது, மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
தபால் துறை ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையில் உள்ள நிலையில், புதிய மென்பொருள் பயன்படுத்தும் போது, சர்வரில் பிரச்னை ஏற்பட்டது. அவ்வப்போது நிலவிய சின்ன, சின்ன சிக்கல்களை களைந்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் பாதிக்காத வகையில், மாற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, சிக்கல் தீர்க்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது' என்றனர்.