/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமம் தேடி வரும் மண், நீர் பரிசோதனை
/
கிராமம் தேடி வரும் மண், நீர் பரிசோதனை
ADDED : ஆக 14, 2025 08:44 PM
கோவை; விவசாயிகள் ஒன்றிணைந்து மண், நீர் பரிசோதனை செய்ய அழைப்பு விடுத்தால், கிராமம் தேடி வந்து மாதிரிகளைப் பெற்றுக் கொள்ள, கோவை வேளாண் அறிவியல் மையம் (கே.வி.கே.,) முன்வந்துள்ளது.
வேளாண் அறிவியல் நிலைய ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பவித்ரா கூறியதாவது:
விவசாயிகள் மண் மற்றும் நீர் பரிசோதனை செய்து, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பயிர் சாகுபடி மேற்கொள்ள வேளாண் துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய ஏதுவாக, கிராமங்களுக்கே சென்று மாதிரிகளைச் சேகரிக்க வேளாண் அறிவியல் மையம் தயாராக உள்ளது.
விவசாயிகள் தங்கள் கிராமங்களில் ஒன்றிணைந்து, மண் மற்றும் நீர் மாதிரிகளை சமர்ப்பித்தால், குறிப்பிட்ட தேதியில் வந்து மாதிரிகளைச் சேகரித்து, 20 நாட்களுக்குள் ஆய்வு முடிவுகள் தரப்படும்.
மண்ணில் ஆறு விதமான பரிசோதனைகளும், நீரில் 9 விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். குறைந்தது 10 விவசாயிகளும் அதிகபட்சம் 50 விவசாயிகளும் ஒருங்கிணைந்து மாதிரிகளை சமர்ப்பிக்கலாம். விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமானால், ஆய்வு முடிவுகளுக்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படும். ஒரு மாதிரிக்கு ரூ.100 கட்டணமாக பெறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04254- 297820 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.