/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானாவாரிக்கு ஏற்ற மண் ஈரம் காக்கும் முறைகள்; விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
/
மானாவாரிக்கு ஏற்ற மண் ஈரம் காக்கும் முறைகள்; விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
மானாவாரிக்கு ஏற்ற மண் ஈரம் காக்கும் முறைகள்; விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
மானாவாரிக்கு ஏற்ற மண் ஈரம் காக்கும் முறைகள்; விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
ADDED : பிப் 12, 2025 11:28 PM
பெ.நா.பாளையம்; மானாவாரிக்கு ஏற்ற மண் ஈரம் காக்கும் முறைகள் குறித்து பெரிய நாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
கோடை உழவு செய்வதினால் அடி மண் இறுக்கம் நீக்கப்பட்டு, மண்ணுக்குள் நீர் உட்புகும் திறன் அதிகரிக்கிறது. அதனுடன் களைகளும் கட்டுப்படுத்தப்பட்டு மண் அரிமாணமும் தவிர்க்கப்படுகிறது. கோடை உழவு செய்த நிலங்களில் மண்ணில் மழைநீர் உட்புகும் திறன் மணிக்கு, 6 முதல், 8 செ.மீ., ஆக உள்ளது. மானாவாரி பயிர் அறுவடை முடிந்தவுடன், கோடை உழவு செய்யலாம்.
முதல் உழவை சட்டி கலப்பை கொண்டும், மறு உழவு கொத்து கலப்பை கொண்டும் உழுவது சிறந்தது. பகுதிப்பாத்தி அமைத்தல் சிறந்த மண் ஈர பாதுகாப்பு முறையாகும். இந்த முறையில் நிலத்தை, 8 மீட்டருக்கு, 5 மீட்டர் என்ற அளவில் சிறு, சிறு பார்த்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த சிறு பாத்திகள் ஒவ்வொன்றும், சிறு சிற்றணைகளாக செயல்பட்டு பாத்திபரப்பில் பெய்யும் மழை நீரை நீண்ட காலத்துக்கு தேக்கி வைக்கிறது.
தேக்கப்பட்ட நீர் அனைத்தும் மண்ணுக்குள் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர் கொள் திறன் அதிகரித்து, பயிருக்கு முழுமையாக பயன்படுகிறது. பாத்திகளின் வாயிலாக மழை நீரின் வேகம் தடைப்படுவதால், மழை நீருடன் அடித்துச் செல்லும் வளமான மேல் மண்ணும் பாத்திகளில் தங்கி விடுவதால், மண்ணரிப்பு குறைகிறது.
இதே போல ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்து, மழை நீர் சால்களில் தேக்கப்பட்டு, நிலத்தடியில் ஈரம் காக்கப்படுகிறது. குழி படுகைகள் அமைத்தல் வாயிலாக மழை நீர் அதில் தேங்கி நிற்பதால், மண்ணின் ஈரம் நீண்ட நாட்களுக்கு நிலை நிறுத்தப்படுகிறது. என, பெரிய நாயக்கன்பாளையம் வேளாண்துறையினர் கூறினர்.