ADDED : ஆக 14, 2025 08:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் இரண்டு நாள் நடந்த மண் பரிசோதனை முகாம் நிறைவடைந்தது.
வேளாண் துறை சார்பில், கிணத்துக்கடவு வட்டாரத்தில், இரு நாட்கள் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக முகாம் நடந்தது. இதில், கிணத்துக்கடவு வட்டார விவசாயிகள் பலர் பங்கேற்று, விளை நில மண் மற்றும் நீரினை ஆய்வு செய்தனர்.
இதில், 12ம் தேதியன்று நடந்த முகாமில், 38 மண் மாதிரிகள் மற்றும் 17 தண்ணீர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. 13ம் தேதி முகாமில், 26 மண் மாதிரி பரிசோதனை மற்றும் 18 தண்ணீர் பரிசோதனைகள் செய்யப்பட்டது.
முகாமில், கிணத்துக்கடவு வேளாண் உதவி அலுவலர் மணி, கோவை வேளாண் ஆய்வக அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.