/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
7வது முறையாக நிரம்பிய சோலையாறு
/
7வது முறையாக நிரம்பிய சோலையாறு
ADDED : ஆக 29, 2025 09:42 PM

வால்பாறை, ; சோலையாறு அணை, 7வது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கி தொடர்ந்து பெய்கிறது. மழை தீவிரமடைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர் மழையால் சோலையாறு அணை ஏற்கனவே ஆறு முறை நிரம்பியது.
இந்நிலையில், சிறிது இடைவெளிவிட்டு பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்யும் நிலையில், நேற்று முன்தினம் இரவு சோலையாறு அணை, 7வது முறையாக முழு கொள்ளளவும் நிரம்பியது.
அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.49 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,185 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,375 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.
இதனால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழையால் வால்பாறையில் கடுங்குளிர் நிலவுவதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
சோலையாறு - 65, பரம்பிக்குளம் - 32, ஆழியாறு - 3, வால்பாறை - 31, மேல்நீராறு - 103, கீழ்நீராறு - 65, காடம்பாறை - 15, மேல்ஆழியாறு - 3, சர்க்கார்பதி - 20, வேட்டைக்காரன்புதுார் - 8, மணக்கடவு - 5, துாணக்கடவு - 28, பெருவாரிப்பள்ளம் - 30, நவமலை - 3, பொள்ளாச்சி - 3 என்ற அளவில் மழை பெய்தது.