ADDED : ஜன 23, 2026 05:51 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சோலார் பேனல் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும், எட்டு அரசு பள்ளிகளுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து சோலார் பேனல் வழங்கியுள்ளது.
இதில், ஒவ்வொரு பள்ளிக்கும், 5 கிலோ வாட் அளவில், 9 சோலார் பேனல் போர்டுகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், சோலார் பேனல் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதன் வாயிலாக, தினமும், 20 முதல் 35 யூனிட் மின்சாரமும், மாதத்திற்கு, 600 முதல் 1,100 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தியாகும்.
இது, ஆன்லைன் சோலார் முறையில் இயங்குகிறது. இதில், பள்ளிக்கு வரும் மின் கட்டண கணக்கீட்டில் இருந்து சோலார் வாயிலாக பெறப்படும் மின்சார அளவு கழித்து மீதி தொகை, மின்வாரியத்திற்கு செலுத்தும் படி சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா, வரும் 29ம் தேதி கோவையில் நடக்கிறது.
