/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலார் மின் இணைப்பு; இன்று சிறப்பு முகாம்
/
சோலார் மின் இணைப்பு; இன்று சிறப்பு முகாம்
ADDED : ஆக 25, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்படும், பிரதம மந்திரி சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ், சோலார் மின் இணைப்பு பெறுவது குறித்த சிறப்பு முகாம், ஒண்டிப்புதுாரில் இன்று நடக்கிறது.
ஒண்டிப்புதுார் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில், காலை, 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் முகாமில், சோலார் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள், மின் வாரிய அதிகாரிகள், மின் நுகர்வோருக்கு, சோலார் மின் இணைப்பு குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.
இத்தகவலை, ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் பிந்து தெரிவித்துள்ளார்.

