/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அரசின் கொள்கையில் மாற்றம் தேவை சோலார் மின் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

ADDED : ஏப் 04, 2025 02:33 AM

கோவை:சோலார் மின் உற்பத்தி, கட்டமைப்பை நிறுவுதல் உள்ளிட்டவற்றில், தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடிக்க, கொள்கை மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என, தமிழ்நாடு சூரிய ஒளி உபகரணங்கள் தயாரிப்பாளர் வினியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
'இன்பார்மா மார்க்கெட்ஸ்' நிறுவனம் சார்பில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான மூன்று நாள் கண்காட்சி 'ரினியூஎக்ஸ்' வரும் 23ம் தேதி சென்னையில் துவங்குகிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, கோவையில் நேற்று நடந்தது. அதில், முன்வைக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்:
8 ச.மீ., பரப்பில் 1 கிலோவாட் சோலார் பேனல் அமைத்தால், நாளொன்றுக்கு 5 யூனிட் மின்சாரம் எடுக்க முடியும்
சூரிய சக்தியை முறையாக பயன்படுத்த, மாநில அரசின் கொள்கைகள் போதுமானதாக இல்லை
மத்திய அரசின் 'சூர்யகர்' திட்டத்தில், வெறும் 25,837 பயனாளிகளுடன் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது
சோலார் கட்டமைப்பை நிறுவ 826 நிறுவனங்கள் தான் பதிவு செய்துள்ளன.
பகல் நேரத்தில் உற்பத்தியாகும் சோலார் மின்சாரத்தை சேமித்து, இரவிலும் பயன்படுத்தும் வசதி தேவை
நெட் மீட்டர் பயன்பாடு கொண்டு வரப்பட வேண்டும்
கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்தால், அரசுக்கு கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.