/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூரிய மின் திட்டம் விழிப்புணர்வு முகாம்
/
சூரிய மின் திட்டம் விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 07, 2025 09:26 PM
அன்னுார்; 'பிரதமரின் சூரிய சக்தி மின் திட்டத்தில், 90 சதவீதம் வங்கி கடன் வழங்கப்படும்' என முகாமில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், நாகமாபுதூரில் வீடுகளுக்கான சூரிய சக்தி மின் திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மின்வாரிய மேட்டுப்பாளையம் செயற்பொறியாளர் சத்யா பேசுகையில், பொதுமக்கள் வீடுகளில் சூரிய மின்சக்தி உபகரணத்தை பொருத்தி செலவை குறைக்கலாம். அரசு ஒரு கி.வாட்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், 2 கி. வாட்டுக்கு 60 ஆயிரம் ரூபாயும் மானியமாக தரு கிறது. ஒரு கி.வாட் சூரிய தகடு பொருத்தினால், தினமும் ஐந்து யூனிட் வரை மின் உற்பத்தி ஆகும்,'' என்றார்.
பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பேசுகையில், ''திட்ட அறிக்கை, ஆதார், பான் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் 90 சதவீதம் கடன் பெறலாம். ஆறு சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது,'' என்றார்.
சூரிய சக்தி மின் உபகரண விற்பனையாளர்கள் பேசுகையில், 'ஒரு கி.வாட்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரையிலான மின் உபகரணங்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்' என் றனர்.