/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடை அருகே திடக்கழிவு குவிப்பு
/
நீரோடை அருகே திடக்கழிவு குவிப்பு
ADDED : ஜூலை 09, 2025 09:59 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டோரம் குப்பை கொட்டப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கிணத்துக்கடவு, கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டின் அருகே, நீரோடை அமைந்துள்ளது.
நீரோடை அருகில், அதிகளவு கம்பெனி பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. தற்போது, மழை பொழிவு இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இது மட்டுமின்றி நாளுக்கு நாள் கழிவு குவிப்பது அதிகரித்து வருவதால், நீரோடையில் கழிவு விழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் தண்ணீர் மாசடையும்.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து, குப்பை உள்ளிட்ட தொழிற்சாலை கழிவை அகற்றம் செய்யவும், கழிவு கொட்டுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.