sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு! தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்க்க கல்வித்துறை தயக்கம்

/

 பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு! தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்க்க கல்வித்துறை தயக்கம்

 பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு! தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்க்க கல்வித்துறை தயக்கம்

 பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு! தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்க்க கல்வித்துறை தயக்கம்


ADDED : டிச 06, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

அரசுப்பள்ளிகளில் தன்னார்வ அமைப்பினர் வாயிலாக விழிப்புணர்வு பணி மேற்கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதியில்லை' என்று கூறி, பள்ளி தலைமையாசிரியர்கள் நிராகரிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.

'சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கேரிபேக் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி துாக்கி வீசப்படும் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; அதையும் மீறி, புழக்கத்திற்கு வரும் பாலிதீன் வகையறாக்களை தரம் பிரித்து, மறுசுழற்சி அல்லது மறுபயன்பாடுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உள்ளாட்சி நிர்வாகங்களும் திடக்கழிவு மேலாண்மை பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும்' என மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல் வழங்கி வருகின்றன. ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், பாலிதீன் குப்பையை சேகரிப்பது, தரம் பிரிப்பது, அவற்றை அப்புறப்படுத்தும் முறை குறித்து, பள்ளி மாணவர் மத்தியில் செயல் விளக்கம் அளிக்க ஏற்பாடுகள் பெரும்பாலான பள்ளிகளில் இல்லை; ஏட்டளவில் மட்டுமே இது கற்றுக் கொடுக்கப்படுவதால், பெரியளவில் பலன் தராது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கப் படுகின்றனர்.

திடக்கழிவு மேலா ண்மை பணியில், தன்னார்வ அமைப்பினர் பலர் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் வாயிலாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விழிப்புணர்வை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என, தன்னார்வ அமைப்பினர் யோசனை கூறுகின்றனர்.

அரசின் வழிகாட்டுதல் வேண்டும்! 'துப்புரவாளன்' அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்பத்மநாபன்கூறியதாவது

பள்ளிகள் தோறும் சென்று மாணவர் மத்தியில் பாலிதீன் பயன்பாட்டால் ஏற்படும் தீமை குறித்து விளக்குகிறோம். மேலும், அவரவர் வீடுகளில் துாக்கி வீசப்படும் பாலிதீன் பை மற்றும் பொருட்களை எடுத்து வரச்செய்து, அவற்றை மறுசுழற்சிக்கு அனுப்புகிறோம்.

மாணவர்கள் கொண்டு வரும் பாலிதீன் பொருட்களுக்கு இணையாக பேனா, பென்சில், நோட்டு புத்தகம் வழங்கி ஊக்குவித்து வருகிறோம்.

கடந்த, 6 மாதத்தில், 30 பள்ளிகளில் நடந்த விழிப்புணர்வில், மாணவ, மாணவியர், 50 டன் அளவில் பாலிதின் பொருட்களை சேகரித்து வந்து எங்களிடம் வழங்கினர். ஏறத்தாழ, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான எழுது பொருட்களை பரிசாக வழங்கி உள்ளோம்.

ஆனால், அரசுப்பள்ளிகளில், இத்தகைய விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி இல்லை எனக்கூறி, பள்ளி தலைமையாசிரியர்கள் நிராகரிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us