/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியது; சாலையோரம் குப்பைகள் எரிப்பதால் பாதிப்பு
/
கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியது; சாலையோரம் குப்பைகள் எரிப்பதால் பாதிப்பு
கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியது; சாலையோரம் குப்பைகள் எரிப்பதால் பாதிப்பு
கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியது; சாலையோரம் குப்பைகள் எரிப்பதால் பாதிப்பு
ADDED : ஜன 20, 2025 06:16 AM

அன்னுார்: கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியது. இதனால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
தமிழக அரசு, கடந்த 2021ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த களம் தேர்வு செய்யப்பட்டது.150 வீடுகளுக்கு ஒரு தூய்மை பணியாளர் நியமிக்கப்பட்டார். அவர்கள் வீடுகளுக்கு சென்று குப்பைகளைப் பெற்று, அதை திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு கொண்டு சென்று அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்க வேண்டும்.
பேட்டரி வாகனங்கள்
மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாகவோ அல்லது விலைக்கோ தரவேண்டும். மக்காத குப்பைகளை அரவை செய்வதற்காக இயந்திரங்கள் நிறுவி அவற்றை பொடியாக்கி தார் சாலை அமைத்தல் சிமென்ட் கம்பெனிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன. துவக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஓரளவு நல்ல முறையில் செயல்பட்டது. நாளாக நாளாக இந்த திட்டம் முடங்கத் தொடங்கியது.
தற்போது பெரும்பாலான ஊராட்சிகளில் உரம் தயாரிப்பது இல்லை. மக்காத குப்பை அரைக்கப்படுவதில்லை. சாலையோரம், பள்ளங்கள், குளம், குட்டைகள் ஆகியவற்றில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது :
சராசரியாக அன்னுார் ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 5,000 முதல் 6000 பேர் உள்ளனர். 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை பணியாளர் நியமிக்க வேண்டும். ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் பேட்டரி வாகனம் வழங்க வேண்டும். ஆனால் சிறிய ஊராட்சிகளுக்கு இரண்டு பேட்டரி வாகனங்களும் பெரிய ஊராட்சிகளுக்கு ஐந்து பேட்டரி வாகனங்களும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
தீ வைத்து எரிப்பு
அதிலும் பல பேட்டரி வாகனங்கள் பழுதடைந்துள்ளன. வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ. 2500 என்பதால் பலரும் இந்த வேலைக்கு முன் வருவதில்லை. இதனால் குப்பை சேகரிக்கும் பணி முடங்கி உள்ளது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக பிரிக்க போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் மொத்தமாக திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டப்படுகிறது. பின்னர் குளம், குட்டை ஓரங்களில், சாலையோர பள்ளத்திலும் போடப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் தொட்டிகள் பயன்பாட்டுக்கு இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. மக்காத குப்பையை அரைத்து தார் சாலை மற்றும் சிமென்ட் கம்பெனிகளுக்கு அனுப்பும் தொழிற்சாலைகள் மூடி கிடக்கின்றன. இதனால் அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கிக் கிடக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.