sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லோக்அதாலத்தில் தீர்வு கிடைத்தது!: 189.86 கோடி ரூபாய் பைசல்

/

லோக்அதாலத்தில் தீர்வு கிடைத்தது!: 189.86 கோடி ரூபாய் பைசல்

லோக்அதாலத்தில் தீர்வு கிடைத்தது!: 189.86 கோடி ரூபாய் பைசல்

லோக்அதாலத்தில் தீர்வு கிடைத்தது!: 189.86 கோடி ரூபாய் பைசல்


UPDATED : ஜன 05, 2026 10:48 AM

ADDED : ஜன 05, 2026 05:09 AM

Google News

UPDATED : ஜன 05, 2026 10:48 AM ADDED : ஜன 05, 2026 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட, தேசிய 'லோக்அதாலத்' விசாரணையில் 22,052 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 189.86 கோடி ரூபாய்க்கு பைசல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளில், இரு தரப்புக்கு இடையே சமரச தீர்வு காண, மாவட்டம் தோறும், தேசிய அளவிலான மெகா 'லோக்அதாலத்' என்ற மக்கள் நீதிமன்ற விசாரணை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், 2025, மார்ச் 8, ஜூன்,14, செப்.,13, மற்றும் டிச., 13 ஆகிய நான்கு நாட்கள், மெகா லோக் அதாலத் விசாரணை நடந்தது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலுார், மதுக்கரை, அன்னுார், வால்பாறை ஆகிய கோர்ட்களில், விசாரணை நடத்தப்பட்டது.

நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், தொழிலாளர் மற்றும் குடும்ப நலன், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மார்ச் 8ல் நடந்த விசாரணையில், மொத்தம் 5,202 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

இதன் வாயிலாக, 48.91 கோடி ரூபாய்க்கு பைசல் செய்யப்பட்டது. ஜூன்14ல் நடந்த விசாரணையில், மொத்தம், 5,540 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 40.46 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது.

செப்., 13ல் நடந்த விசாரணையில்,5,672 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 64.88 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது. டிச., 13ல் நடந்த விசாரணையில், மொத்தம், 5,638 வழக்கில் தீர்வு காணப்பட்டு, 35.61 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக, கடந்தாண்டு நடத்தப்பட்ட தேசிய லோக்அதாலத் விசாரணை வாயிலாக, 22,052 வழக்கில் தீர்வு காணப்பட்டு, 189.86 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது.

விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் இருந்த வழக்குகளில், லோக் அதாலத்தில் சமரசம் ஏற்பட்டு, 25க்கும் மேற்பட்ட பிரிந்த தம்பதியர், மீண்டும் இணைந்து வாழ சம்மதித்தனர்.

விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் இருந்த வழக்குகளில், லோக் அதாலத்தில் சமரசம் ஏற்பட்டு, 25க்கும் மேற்பட்ட பிரிந்த தம்பதியர், மீண்டும் இணைந்து வாழ சம்மதித்தினர்.






      Dinamalar
      Follow us