ADDED : மே 29, 2026 03:06 AM

அ நிறம் | அளவு
கோவை, : கோவை வடக்கில் 108, தெற்கில் 107 கடைகள் என, 215 'டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்நிலையில், சி.ஐ.டி.யூ., ஏ.டி.பி., உட்பட ஆறு தொழிற்சங்கங்களை கொண்ட டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டுக்குழுவினர் நேற்று முன்தினம் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கையை வலியு றுத்தி ஈரோடு, திருப்பூர் மாவட்ட பணியாளர்களுக்கு ஆதரவாக பீள மேட்டில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொ.மு.ச.(டாஸ்மாக்) மாவட்ட தலைவர் ராக்கிமுத்து,''அரசிடம் பேசி தீர்வுகாண அதிகாரிகள் 30 நாள் அவகாசம் கேட்டுள்ளனர். அதற்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடக்கும்'' என்றார்.
