/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் திருத்த முகாமை நீடிக்க சோமனூர் மக்கள் கோரிக்கை
/
ஆதார் திருத்த முகாமை நீடிக்க சோமனூர் மக்கள் கோரிக்கை
ஆதார் திருத்த முகாமை நீடிக்க சோமனூர் மக்கள் கோரிக்கை
ஆதார் திருத்த முகாமை நீடிக்க சோமனூர் மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 20, 2025 10:57 PM

சோமனூர்; சோமனூரில் நடக்கும் ஆதார் திருத்த முகாமை, மேலும் சில வாரத்துக்கு தொடர வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோமனூரில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி மற்றும் தபால் துறை சார்பில், கடந்த, 14ம் தேதி துவங்கிய, ஆதார் திருத்த முகாம் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது.
கடந்த நான்கு நாட்களாக, ஏராளமான பொதுமக்கள், தங்கள் ஆதாரில் பிழை திருத்தம், செல்போன் எண் மாற்றுதல், புகைப்படம் புதிதாக எடுத்தல் உள்ளிட்டவற்றை செய்து பயன் பெற்றனர். இந்நிலையில், இன்னும் பலர் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், இந்த ஆதார் முகாமை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.