/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொஞ்சம் 'சரக்கு' கொட்டிருச்சு; அதுக்கு பீர் பாட்டிலால் அடி
/
கொஞ்சம் 'சரக்கு' கொட்டிருச்சு; அதுக்கு பீர் பாட்டிலால் அடி
கொஞ்சம் 'சரக்கு' கொட்டிருச்சு; அதுக்கு பீர் பாட்டிலால் அடி
கொஞ்சம் 'சரக்கு' கொட்டிருச்சு; அதுக்கு பீர் பாட்டிலால் அடி
ADDED : ஜூலை 01, 2025 10:50 PM
கோவை; கணபதி, வி.என்.எஸ்., நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், 50. இவர் குனிமுத்துார், இடையர்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அப்போது, பாரில் மது குடித்துக்கொண்டிருந்த ஜான் பீட்டர், 53 என்பவர் மது குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, ராஜ்குமாரின் கை தவறுதலாக ஜான் பீட்டர் வைத்திருந்த மதுபானத்தின் மீது பட்டு, கீழே கொட்டியது.
இதனால் ஆத்திரமடைந்த ஜான் பீட்டர், தகாத வார்த்தைகளால் திட்டி, பீர் பாட்டிலை எடுத்து ராஜ்குமாரின் தலையில் அடித்தார். இதில் ராஜ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து, ராஜ்குமாரின் தங்கை ரீட்டா அளித்த புகாரில், குனியமுத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜான் பீட்டரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.