தண்ணீர் தொட்டி கிடைத்தது
'ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயமுத்துார் டெக்ஸிட்டி' சார்பில், சத்ய ஜீவன் குழந்தைகள் இல்லத்துக்கு, தலா, 5,000 ரூபாய் செலவில் இரண்டு தண்ணீர் தொட்டிகள் வழங்கப்பட்டன. ரோட்டரி கிளப் சார்பில் லோகேஷ், நீலேஷ், பரத், கல்பனா, மேகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்தகவலை, ரோட்ராக்ட் கிளப் கோயமுத்துார் டெக்ஸிட்டி தலைவர் ஜெய்சீலன் தெரிவித்துள்ளார்.
குறைகேட்பு கூட்டமில்லை
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், வாரந்தோறும் செவ் வாய்க்கிழமை மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்துவது வழக்கம். நிர்வாக காரணங்களால், இன்று (18ம் தேதி) கூட்டம் நடைபெறாது, என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
கோவை, போத்தனூர் அடுத்த கணேசபுரம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி, 46. இவரது தாய் மாராத்தாள், 85. நேற்று முன்தினம் மதியம், மூதாட்டி குளியலறை கதவை திறந்தார். அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.