/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தந்தையை மரக்கட்டையால் தாக்கிய மகன் கைது
/
தந்தையை மரக்கட்டையால் தாக்கிய மகன் கைது
ADDED : ஜூலை 31, 2025 10:06 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே தந்தையை மரக்கட்டையால் தாக்கிய இளைய மகனை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மா, 51. கூலி தொழிலாளி. இவரது கணவர் வெள்ளிங்கிரி, 52. இந்த தம்பதியினருக்கு குமரேசன், ரஞ்சித்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி, பெற்றோரின் வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இளைய மகன் ரஞ்சித்குமார், அவரது பெற்றோர் பத்மா மற்றும் வெள்ளிங்கிரி ஆகியோரிடம் அடிக்கடி பிரச்னை செய்வது வழக்கமான நிகழ்வாக உள்ளது. இதனிடையே கடந்த 28ஆம் தேதி ரஞ்சித் குமார் அவரது குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது அப்பா, ரஞ்சித்குமாரை திட்டினார்.
இதனால் கோபமடைந்த ரஞ்சித்குமார், அவரது தந்தையை கெட்ட வார்த்தைகளால் திட்டியும், மரக்கட்டையால் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தார். இதில் வெள்ளிங்கிரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்து பின் நேற்று வீடு திரும்பினர்.
காரமடை போலீஸ் ஸ்டேஷனில் பத்மா அளித்த புகாரின் பெயரில் உடனடியாக வழக்கு பதிவு செய்த போலீசார், ரஞ்சித்குமாரை, 30, கைது செய்தனர். ----